போலீசாருக்கு மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜன் கைது - Agnipuratchi

போலீசாருக்கு மிரட்டல் விடுத்த புல்லட் நாகராஜன் கைது

Share This

தேனி மாவட்டம் பெரியகுளம் சேர்ந்தவர் பிரபல ரவுடி புல்லட் நாகராஜன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை சிறைத்துறை அதிகாரி ஊர்மிளா மற்றும் காவல் ஆய்வாளர் மதனகலா ஆகியோருக்கு "என்னை நெருங்க முடியாது, நானே நினைத்தால் தான் என்னை கைது செய்ய முடியும்" என்னும் மிரட்டல் ஆடியோவினை அனுப்பியுள்ளார். மற்றுமொரு ஆடியோவில் தேனி மாவட்ட கலெக்டரையும், மாவட்ட போலீசாரையும் விமர்சித்து பேசி இருந்தார். இந்நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தலைமறைவான இருந்த ரவுடி புல்லட் நாகராஜனை போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். பின்பு தென்கரை காவல் நிலையத்துக்கு நாகராஜனை கொண்டு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages