கடலில் நிலக்கரி கையாளும் தளத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் - Agnipuratchi

கடலில் நிலக்கரி கையாளும் தளத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்

Share This

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்லாமொழி என்ற இடத்தில் 680 மெகாவாட் திறனுடைய 2 அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த மின் நிலையங்களுக்கு நிலக்கரி கொண்டுவருவதற்காக கல்லாமொழி அருகே கடலுக்குள் 15 கிலோமீட்டர் தொலைவில் பாலம் அமைக்க முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் படகுகளில் கருப்பு கொடி ஏற்றிய படி நடுக்கடலில் முற்றுகை போராட்டத்தில் 400 படகுகளில் 35 மீனவ கிராமங்களை சேர்ந்த 1000 மீனவர்கள் பங்கேற்றனர். கடலில் நிலக்கரி இறக்குதளம் அமைக்கப்பட்டால் இயற்கை வளம் பாதிக்கப்பட்டு மீன்கள் அழியும் நிலை ஏற்படும் என்று மீனவர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages