ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 40 மீனவர்கள் கேரள மாநிலத்தை ஒட்டியுள்ள அரபிக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் கேரள மாநில மீனவர்கள் அதிகம் மீன்பிடிக்கும் பகுதியில் அவர்கள் மீன்பிடித்தாக கூறப்படும் நிலையில், கேரளாவின் காத்தங்கோடு மாவட்டத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் 4 படகுகளில் சென்றிருந்த தமிழக மீனவர்கள் 40 பேரை சிறைபிடித்தனர்⛓. தங்கள் எல்லைக்குள் வந்து மீன் பிடித்தால் படகு ஒன்றிற்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.12 லட்சம் கொடுத்தால்தான் மீனவர்களை விடுவிப்போம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து மங்களூர் விசைப்படகு உரிமையாளர்கள் கேரளா மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை மீட்டதாக தகவல் வெளியானது. ஆனால் பணம் செலுத்திய 3 படகுகளில் இருந்த 30 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள படகில் இருந்த 10 மீனவர்கள் தாங்கள் பணம் செலுத்தாததால் விடுவிக்கப்படவில்லை என வீடியோ மூலம் தகவல் அனுப்பியுள்ளனர்.
Home
அண்மை செய்திகள்
கேரள மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுள் 30 பேர் மட்டுமே விடுவிப்பு
கேரள மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களுள் 30 பேர் மட்டுமே விடுவிப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment