சென்னையில் கடந்த 3 நாட்களில் 14 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் ஹெல்மெட் அணியாதவர்களிடமிருந்து - Agnipuratchi

சென்னையில் கடந்த 3 நாட்களில் 14 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் ஹெல்மெட் அணியாதவர்களிடமிருந்து

Share This

இருசக்கர வாகனத்தில் ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவை பின்பற்றவில்லை என காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து வரும் 9ம் தேதிக்குள் நடவடிக்கைகள் மேற்கொண்ட அறிக்கையினை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்காக கடந்த 3 நாட்களாக ஹெல்மெட் அணியாதவர் இருசக்கர வாகனப் பயணிகள் மீது சென்னை போக்குவரத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதன் படி, கடந்த மூன்று நாட்களில் மட்டும் 14 ஆயிரத்து 700 வழக்குகள் பதியப்பட்டு, அவர்களிடம் இருந்து தலா 100 ரூபாய் வீதம் 14 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages