விவி மினரல்ஸ்' நிறுவனத்தில் 30 வங்கி கணக்குகள் முடக்கம் - Agnipuratchi

விவி மினரல்ஸ்' நிறுவனத்தில் 30 வங்கி கணக்குகள் முடக்கம்

Share This

விவி மினரல்ஸ் குழுமத்திற்கு சொந்தமான 10 இடங்களில் 5வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். விசாரணைக்காக சென்னையில் இருந்து வைகுண்டராஜன் விமானம் மூலம் தூத்துக்குடி அழைத்து செல்லப்பட்டார். திசையன்விளையில் உள்ள விவி மினரல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வைகுண்டராஜனிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். மேலும், கடந்த 25 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் தாது மணல் ஏற்றுமதியில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில், தற்போது விவி மினரல்ஸ் குழுமத்திற்கு தொடர்புடைய 24 வங்கி லாக்கர்கள் மற்றும் 30 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages