அதிமுக எம்எல்ஏ-க்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மூன்று பேரும் டிடிவி தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரையும் தொடர்ந்து கடுமையாக பேசி வருகிறார்கள். இவர்களின் பதவிகளை பறிக்க வேண்டுமென்று அதிமுக மூத்த தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். அந்த மூன்று எம்எல்ஏ-க்களையும் சமரசம் செய்ய சில மூத்த அதிமுக தலைவர்கள் முயன்றனர். ஆனால் தினகரனுக்கு ஆதரவாக இருப்பதில் இருந்து பின்வாங்கவில்லை. எனவே அவர்கள் மூன்று பேரையும் அரசியல் ரீதியாக முழுமையாக ஓரம் கட்டும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 3 எம்எல்ஏ-க்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதில் ‘‘கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது⁉என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தினகரனை ஆதரிக்கும் 3 எம்.எல்.ஏ.,க்களிடம் விளக்கம்-அரசு கொறடா பரிந்துரை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment