டிஎன்-ஸ்மார்ட்' ஆப்'பினை துவக்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி - Agnipuratchi

டிஎன்-ஸ்மார்ட்' ஆப்'பினை துவக்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி

Share This

இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து தகவல் தெரிவிக்கும் 'டி என்-ஸ்மார்ட்' என்னும் ஆப்'பினை இன்று சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைத்தார். இந்த ஆப் மூலம், பேரழிவு சாத்தியக்கூறுகள், எச்சரிக்கைகள், மழைப்பொழிவு, வெள்ளம், சுனாமி போன்ற செய்திகளை முன்னதாக ஆய்வு செய்து, இந்த ஆப் உபயோகப்படுத்துவோருக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும். அனுப்பப்படும் நபர் அந்த செய்தியை படிக்கும் வரை, தொடர்ந்து அலாரம் அடித்து கொண்டிருக்கும் என்பது இதன் சிறப்பம்சம் ஆகும். மேலும், இதன் சேவை ஆன்லைன் மூலமாகவும் செய்யல் படும். இவ்வாறு முன்கூட்டியே தகவல்கள் பெறுவதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ள இந்த சேவை பெரிதும் பயன்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages