கோவையில் உயிர் அமைப்பினை துவங்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி - Agnipuratchi

கோவையில் உயிர் அமைப்பினை துவங்கி வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி

Share This

கோவையில் உயிர் என்ற தன்னார்வ அமைப்பை முதலமைச்சர் எடப்பாடி தொடங்கி வைத்தார். வாகன ஓட்டிகள் தங்களது பொறுப்பை உணர்ந்தால் விபத்தில்லா மாநிலமாக உருவாக்க முடியும் என்றும், விபத்து தொடர்பாக உயிர் என்ற அமைப்பு மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். 108 ஆம்புலன்ஸ் இலவச சேவை தமிழகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக பெருமையுடன் கூறிய அவர், இதன் மூலம் 4.60 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், ஜிபிஎஸ் கருவியை பயன்படுத்துவதற்காக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு ஆன்ட்ராய்டு செல்போன் தரப்பட்டுள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், விபத்து பற்றி குறும்படங்களை வெளியிடுதல், விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வ அமைப்புகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages