6ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பலாத்காரம் செய்தவனுக்கு வாழ்நாள் சிறை - Agnipuratchi

6ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பலாத்காரம் செய்தவனுக்கு வாழ்நாள் சிறை

Share This

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த செம்மண்குட்டை பகுதியைச் சேர்ந்தவன் ராமையன். 56 வயதான இவன் ஆடுமேய்க்கும் தொழில் செய்து வந்தான். கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி அங்குள்ள வயல்காட்டுப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்தான். அப்போது அங்கு தனிமையில் ஆடுகளுக்கு காவலாக இருந்த சிறுமையை நோட்டமிட்டு கொடூரமாக பலாத்காரம் செய்துள்ளான். இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நீண்ட நாட்களாக காயங்கள் ஆறாமல் இருந்ததால் மருத்துவர்கள் ரத்த பரிசோதனை செய்து பார்த்தனர். இதில் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த சிறுமிக்கு 'ஜெனிடல் கெர்பீஸ்' என்ற பாலியல் தொற்று நோய் ஏற்பட்டு இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். 
இதனையடுத்து போலீசார் ராமையாவை கைது செய்தனர். ராமையனுக்கு ஏற்கனவே பாலியல் நோய் தொற்று இருந்துள்ளது. அதனால் தான் அந்த சிறுமிக்கும் பால்வினை நோய் தொற்று ஏற்பட்டது தெரியவந்தது. இந்த நிலையில் வழக்கை விசாரித்து வந்த தஞ்சை மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன், ராமையனை சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார். பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும், சிறுமிக்கு பால்வினை நோயை பரப்பியதற்காக ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages