விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து 6 பயிர்களின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து, 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் நேற்று பேரணி நடத்தினர். இந்த பேரணியில் சுமார் 30,000 விவசாயிகள் கலந்து கொண்டனர். நேற்று காலை டெல்லியின் புறநகர் எல்லை பகுதியான காஜியாபாத் வழியாக டெல்லி எல்லையை வந்தடைந்தனர். தடைகளை மீறி வலுகட்டாயமாக நுழைந்த அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வன்முறை வெடித்தது. பின்னர் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் விரட்டியடித்தனர். இதில் பேரணியில் வந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பெண்கள், முதியவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயம் அடைந்து சாலையில் ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர் . எனினும் விவசாயிகள் கலைந்து செல்லாமல் எல்லையிலேயே அமர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது டெல்லி போலீசார் தாக்குதல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment