சபரிமலைக்கு செல்ல முயன்ற முஸ்லீம் பெண் முஸ்லிம் ஜமாஅத்திலிருந்து நீக்கம் - Agnipuratchi

சபரிமலைக்கு செல்ல முயன்ற முஸ்லீம் பெண் முஸ்லிம் ஜமாஅத்திலிருந்து நீக்கம்

Share This

அனைத்து வயது பெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதியளித்து சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பல பெண்கள் சபரிமலை சென்றபோது ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தினால் திரும்பி வந்த நிலையில், கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் மாடல் அழகி ரெஹானா பாத்திமா எந்த விரதமும் மேற்கொள்ளாமல் நெய் தேங்காய், அரிசிக்கு பதிலாக ஆரஞ்சு மற்றும் ஆப்பிள் பழங்களை இருமுடியாக கட்டிக்கொண்டு கடந்த 19ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்றார். கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவையடுத்து ரெஹானாவை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். 
இந்நிலையில் ரெஹானா தொடர்பாக கேரள மாநில முஸ்லிம் ஜமாஅத் தலைவர் வழக்கறிஞர் ஹாஜி ஏ.பூக்குன்ஜு வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரெஹானா பாத்திமா என்ற முஸ்லிம் பெயரை வைத்துகொண்டு ஐயப்பன் கோவிலுக்குள் தரிசனம் செய்ய முயன்றதன் மூலம் இந்துக்களின் உணர்வுகளை அவர் காயப்படுத்தி விட்டார். எனவே, இஸ்லாம் மதத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். ரெஹானாவையும் அவரது மஹால்லாவில் குடும்பத்தாரையும் தள்ளிவைக்குமாறு எர்ணாகுளம் மத்திய முஸ்லிம் ஜமாஅத்-ஐ அறிவுறுத்தி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages