உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம் -ஒரு மணி நேரத்தில் செயல்படத் தொடங்கியது - Agnipuratchi

உலகம் முழுக்க யூடியூப் இணையதளம் முடக்கம் -ஒரு மணி நேரத்தில் செயல்படத் தொடங்கியது

Share This

இண்டர்நெட்டில் தெரியாத தகவல்களை தேடி தெரிந்து கொள்வதை போன்று, வீடியோக்களை பார்த்து பல விஷயங்களை தெரிந்து கொள்ள வழி செய்யும் சேவை தான் யூடியூப். இந்த நிலையில், தொழில்நுட்ப குறைபாடு காரணமாக யூடியூப் இணையதளம் முடங்கியுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இதுகுறித்து யூடியூப் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில், "யூடியூப் வேலை செய்யாதது குறித்த உங்களது தகவலுக்கு நன்றி. தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட குறைபாட்டை சரி செய்யும் பணி விரைந்து நடந்து வருகிறது. விரைவில் சரிசெய்யப்படும், தடங்கல்களுக்கு வருந்துகிறோம் என்று பதிவு செய்தது. இதனையடுத்து தற்போது தொழில்நுட்ப வல்லுநர்களின் முயற்சியை அடுத்து பழுது சரி செய்யப்பட்டு யூடியூப் இணையதளம் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. இது குறித்து, யூடியூப் அதன் ட்விட்டர் பக்கத்தில், "நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம். பொறுமையுடன் காத்திருந்த அனைவருக்கும் நன்றி. எவருக்கேனும் பிரச்சனை இருப்பின் தயைகூர்ந்து எங்களிடம் தெரிவிக்கவும் என்று பதிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages