ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை குழுவில் காவல் ஆய்வாளர் தேவை-அரசுக்கு கடிதம் - Agnipuratchi

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை குழுவில் காவல் ஆய்வாளர் தேவை-அரசுக்கு கடிதம்

Share This

ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தின் சார்பில் 107 பேரிடம் இதுவரை நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தியுள்ளார். இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகுபவர்களின் பின்புலங்களை ஆணையம் தெரிந்து கொள்வதற்கும், சில சாட்சிகளை விசாரிப்பதற்கும் காவல் ஆய்வாளர் ஆணையத்திற்கு தேவைப்படுவதாகவும் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக போயஸ் கார்டனில் செப்டம்பர் 22 ம் தேதி முதல் தளத்தில் இருந்த இரண்டு பணிப்பெண்கள் யார்⁉ அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்ற விவரங்கள் ஆணையத்திற்கு கிடைக்கவில்லை. பணிப்பெண்களுக்கு சம்மன் அனுப்ப அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை விசாரிப்பதற்கு காவல் ஆய்வாளர் தேவை என்றும் அந்த கடிதத்தில் சுட்டி காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages