தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிக்காக 342 ஏக்கர் நிலத்தை சிப்காட் நிர்வாகம் ஒதுக்கியிருந்தது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் போராட்டம் தீவிரமான காரணத்தால் ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. இதனையடுத்து, ஸ்டெர்லைட்ஆலை விரிவாக்கப் பணிக்கான நிலத்தை திரும்பப் பெற்ற தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை அக்டோபர் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டது.
ஸ்டர்லைட் விவகாரம்-தமிழக அரசின் ஆணைக்கு இடைக்கால தடை
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment