சிபிஐ இயக்குநர்களுக்கு கட்டாய விடுப்பு குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் - Agnipuratchi

சிபிஐ இயக்குநர்களுக்கு கட்டாய விடுப்பு குறித்து மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Share This

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா ஆகியோர் மீது அண்மையில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, அவர்கள் இருவரையும் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு இன்று வந்தது. அப்போது சிபிஐ இயக்குநர்கள் மீது நடவடிக்கை ஏன்⁉என்று விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. விசாரணை நிலுவையில் உள்ள முக்கிய வழக்குகள் குறித்த தகவல்களை சீலிடப்பட்ட கவரில் சிபிஐ ஒப்படைக்க வேண்டும் என்றும், வழக்கின் விசாரணையை நவம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சிபிஐ தற்காலிக இயக்குநர் நாகேஸ்வரராவ் முக்கிய முடிவுகளை எடுக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages