பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி - Agnipuratchi

பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

Share This

பிரதமரை சந்திப்பதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோரோடு நேற்று டெல்லி சென்றார். அங்கு அவரை தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் அதிமுக எம்.பி.க்கள். வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் இன்று காலை தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அதிமுக அலுவலகம் சென்று எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் பிரதமரை சந்தித்த முதல்வர், தமிழக திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, அரசியல் நிலவரம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருவரும் இணைந்து ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கும்படி பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages