கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்தவர் நந்தீஷ். பட்டியலினத்தைச் சேர்ந்தவரான இவர், வேறு சாதிப்பிரிவைச் சேர்ந்த சுவாதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இருவரையும் காணவில்லை என நந்தீஷின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் நந்தீஷூம், சுவாதியும் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்த விசாரணை நடந்து வந்த நிலையில், இருவரையும் பெண்ணின் குடும்பத்தார் ஆணவப் படுகொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்றவர்களைப் பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஆணவப் படுகொலை-பெண்ணின் தந்தை உட்பட 3 பேர் கைது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment