சேலம் ரயில் கொள்ளை விவகாரம்-5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை - Agnipuratchi

சேலம் ரயில் கொள்ளை விவகாரம்-5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

Share This

கடந்த 2016-ம் ஆண்டு சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் மேற்கூரை துளையிடப்பட்டு ரூ. 5.75 கோடி கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பந்தமாக மத்திய பிரதேசத்தை சேர்ந்த, 5 பேரை, சிபிசிஐடி போலீசார் 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் போது கொள்ளையடித்த ரூ.5.75 கோடியை செலவு செய்துவிட்டதாக கொள்ளையர்கள் வாக்குமூலம் தந்துள்ளனர். இந்நிலையில் பணத்தை, தங்கமாகவோ, வேறேதும் பொருளாகவோ மாற்றி வைத்திருக்கிறார்களா என சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 7 பேரை கைது செய்தும் கூட கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 4ல் ஒரு பங்கு கூட மீட்க முடியாமல் சிபிசிஐடி போலீசார் திணறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages