திசைமாறிய கஜா புயல்-6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை - Agnipuratchi

திசைமாறிய கஜா புயல்-6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Share This

கஜா புயலின் திசை மாறியது. கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் (15ம் தேதி) கரையை கடக்கிறது. அப்போது, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டம் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும். 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், "சென்னையை பொறுத்தவரையில் மழை பெய்யக்கூடும். புயல் பாதிப்பு இல்லை. இயல்பான அளவில் காற்று வீசக்கூடும். பொதுவாக கனமழைக்கான அறிவிப்பை ரெட் அலர்ட்டாக குறிப்பிட்டு இருக்கிறோம். இது எங்களின் நிர்வாக நடவடிக்கைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்களுக்கானது அல்ல. எனவே மக்கள் பீதி அடைய வேண்டியது இல்லை. இது குறித்த விளக்கத்தை எங்களது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளோம்" என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages