தருமபுரி பாலியல் பலாத்கார வழக்கு-தேடப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் சரண் - Agnipuratchi

தருமபுரி பாலியல் பலாத்கார வழக்கு-தேடப்பட்ட குற்றவாளி நீதிமன்றத்தில் சரண்

Share This

தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பிளஸ்-2 மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த விவகாரம் குறித்து கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய அரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்லப்பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சதீஷ்(22) மற்றும் ரமேஷ்(22) ஆகிய நபர்களை தேடிவந்தனர். இந்தநிலையில் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சதீஷ் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அவரை அங்கு சென்று கைது செய்து ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ரமேசை போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில், 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages