பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரம் - Agnipuratchi

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரம்

Share This

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் மாநில அரசு எடுக்கும் முடிவில் மத்திய அரசு தலையிட முடியாது என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சிபிஐ விசாரித்த வழக்குகளில் குற்றவாளிக்கு விதித்த தண்டனையை குறைக்கவும், மத்திய அரசு தலையிட எந்த சட்டமும் வகுக்கப்படவில்லை என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ள நிலையில், தமிழக அமைச்சரவை தீர்மானம் மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து பேரறிவாளனின் வழக்கறிஞர் சிவா, விடுதலை செய்ய வேண்டிய உரிய அரசு, தமிழக அரசு தான் என மத்திய அரசே ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய அரசின் பதில், விடுதலையை நோக்கி நிச்சயம் கொண்டு செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages