கஜா புயலின் சேதம் குறித்த அறிக்கை-மத்திய ஆய்வு குழு தலைவர் பேட்டி - Agnipuratchi

கஜா புயலின் சேதம் குறித்த அறிக்கை-மத்திய ஆய்வு குழு தலைவர் பேட்டி

Share This

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தினர். தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தினையடுத்து செய்தியாளர்களை சந்தித்து மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், கஜா புயல் பாதிப்பு குறித்த அறிக்கை ஒரு வாரத்திற்குள் மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும். மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டதில் அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது. புயலால் உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டிருந்தாலும், உயிர்சேதம் ஏற்படாமல் அரசுகள் காப்பாற்றியுள்ளன என்று கூறினார். கடந்த 3 நாட்களாக ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழுவினர் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தயுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages