மேகதாது அணை கட்ட மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி - Agnipuratchi

மேகதாது அணை கட்ட மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி

Share This

கர்நாடகா அரசு தொடர்ச்சியாக மேகதாது அணை கட்ட அனுமதி கேட்டு மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்தது. குடிநீர் தேவைக்காகவும், மின் உற்பத்திக்காக கட்டப்பட உள்ளது என்றும், வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிப்பது தான் இதன் முக்கிய நோக்கம் என்று கூறி வரும் நிலையில், தமிழக அரசு இதற்கு பெரும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா அரசின் மேகதாது அணையினை கட்டுவதற்கான இடம், செலவு, அணையின் பரப்பளவு, அம்சங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கிய வரைவு அறிக்கையை மத்திய சுற்றுச் சூழல் துறைக்கு சமர்பித்திருந்தது. தற்போது சுற்றுச் சூழல் துறை வரைவு அறிக்கைக்கு அனுமதி அளித்திருக்கிறது. ஏற்கனவே, காவேரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடுவதில் போராடி வரும் நிலையில் இந்த அணையினை காவிரி ஆற்றை மறித்து கட்டுவதால் தமிழகத்திற்கு காவிரி நீர் பெருவதில் பெரிய பிரச்னை ஏற்படும் என கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages