கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு - Agnipuratchi

கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிப்பு

Share This

ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவர்கள் நேற்று விசைப் படகுகளில் கடலுக்கு சென்றனர். இவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி, 30க்கும் மேற்பட்ட படகுகளை சுற்றி வளைத்தனர். மீனவர்களின் வலைகளையும், மீன்பிடி சாதனங்களையும் சேதப்படுத்தினர். இலங்கை கடற்படையால் சேதப்படுத்தப்பட்ட மண்டபம் மீனவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியது. அதில் இருந்த மீனவர்கள் நீண்ட நேரம் போராடி உயிர் தப்பினர். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினர் எங்களை விரட்டியடிப்பது, வலைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்திய எல்லையில் மீன் பிடித்தாலும் இலங்கை கடற்படையினரின் தொந்தரவு உள்ளது. இதற்கு மத்திய அரசுதான் தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages