ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வழக்கு -தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு - Agnipuratchi

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வழக்கு -தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

Share This

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசு செலவில் நினைவிடமாக மாற்றுவதற்கு எதிரான வழக்கில் 2 வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இது குறித்து தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதா மறைந்த பிறகு அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தொடர்பாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஒரு சட்ட விரோதம். ஏனென்றால் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டவர். அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். இந்நிலையில், அரசு செலவில் நினைவிடமாக மாற்ற முயற்சித்தால் அதுஒரு தவறான முன் உதாரணம் ஆகிவிடும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆஜர் ஆக வேண்டும் என்பதற்காக கால அவகாசம் கேட்டார். இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 2 வார காலம் ஒத்திவைத்து அதற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages