கடந்த மே மாதம் பொதுமக்கள் நடத்திய மாபெரும் போராட்டத்திற்குப் பின், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது. ஆலை அமைந்துள்ள பகுதியில் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஆலைக்கு சீல் வைத்தது தமிழக அரசு. இதனிடையே மத்திய நீர் வளத்துறையின் நிலத்தடி நீர் அமைப்பு தாக்கல் செய்த அறிக்கையில் தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுக்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை இன்று விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுரேந்தர் மற்றும் கிருஷ்ணன் ராசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. மேலும், மத்திய நிலத்தடி நீர் அமைப்பின் அறிக்கையை ஏற்றுக்கொள்வதும் மறுப்பதும் மாநில அரசைப் பொறுத்த விஷயம். தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஸ்டர்லைட் மீதான வழக்கு தள்ளுபடி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment