சன்னிதானத்தில் பெண்கள் நுழைந்தால் நடை சாற்றப்படும் -மேல்சாந்தி மீண்டும் எச்சரிக்கை - Agnipuratchi

சன்னிதானத்தில் பெண்கள் நுழைந்தால் நடை சாற்றப்படும் -மேல்சாந்தி மீண்டும் எச்சரிக்கை

Share This

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பினையடுத்து, ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை திறந்தபோது பெரும் கலவரமே அங்கு நடந்தது. இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுகிறது. இந்நிலையில், நடைதிறப்பின்போது இளம்பெண் பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க கூடாது என்று ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். மேலும் இது குறித்து, மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி போலீஸ் ஐ.ஜி. அஜித்குமாரை சந்தித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சபரிமலை கோவிலில் ஐதீகத்தை மீறி பெண்களை சாமி தரிசனத்திற்கு அனுமதித்தால் கோவில் நடையை அடைத்து சுத்திகலச பூஜை நடத்தப்படும்” என்று கூறியுள்ளார். இதனால் மீண்டும் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages