மெரினா கடற்கரை-கடைகளை அகற்றும் பணி தீவிரம் - Agnipuratchi

மெரினா கடற்கரை-கடைகளை அகற்றும் பணி தீவிரம்

Share This

புகழ்பெற்ற சென்னை மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் நோக்கில், கடந்த 2014ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி சார்பில், கடைகள் முறைப்படுத்தப்பட்டன. அப்போது, கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை இடையே, உட்புறச்சாலையிலிருந்து கடலை நோக்கி 6 வரிசைகளாக கடைகள் மாற்றி அமைக்கப்பட்டன. ஆனால், உட்புறச் சாலைக்கு அருகில் உள்ள கடைகளில் மட்டும் அதிக விற்பனை நடப்பதாகக் கூறி, பிற வியாபாரிகள் தங்கள் கடைகளை மீண்டும் தங்கள் விருப்பப்படி மாற்றி அமைத்துக் கொண்டனர். இதையடுத்து மீண்டும் அந்த கடைகளை முறைப்படுத்த சென்ன மாநகராட்சி அதிகாரிகளும், போலீசாரும் வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தற்போது உட்புறச்சாலைக்கு இணையாக மணற்பரப்பில் 2 வரிசைகளாக கடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages