விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழக நபருக்கு 9 ஆண்டுகள் சிறை - Agnipuratchi

விமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழக நபருக்கு 9 ஆண்டுகள் சிறை

Share This

தமிழகத்தைச் சேர்ந்த பிரபு ராமமூர்த்தி (35) என்ற நபர், கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதி லாஸ்வேகாஸில் இருந்து டெட்ராய்ட் நகருக்கு, தனது மனைவியுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மறுபுறம் அமர்ந்திருந்த இன்னொரு இளம்பெண் இரவு நேர தூங்கி கொண்டிருந்தார். இந்நிலையில், தனக்கு ஏதோ அசௌகரியமாக இருப்பதாக உணர்ந்த அப்பெண் கண் விழித்து பார்த்தபோது, பிரபு ராமமூர்த்தி அவருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து விமான நிலைய போலீசார் அவரை கைது செய்துள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பான வழக்கு டெட்ராய்ட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. பிரபு ராமமூர்த்திக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து, அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages