ஸ்டர்லைட் ஆலை திறப்பு குறித்த பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தமிழக முதல்வர், அமைச்சர் ஜெயக்குமார் - Agnipuratchi

ஸ்டர்லைட் ஆலை திறப்பு குறித்த பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தமிழக முதல்வர், அமைச்சர் ஜெயக்குமார்

Share This

ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடரும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து சேலம் மாவட்டம் ஒமலூரில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளும். ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும்" என்று ஆவேசமாக பேசியுள்ளார். 
இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளதாவது, "ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எண்ணம் என்பது ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என்பதுதான். அதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு. தேசிய பசுமை தீர்ப்பாயம் என்பது பொதுவாக அவர்கள்தான் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையில், சமூக உணர்வுடன் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் அளித்திருக்கும் உத்தரவு, அவர்களது கொள்கைக்கு அடிப்படையிலேயே முரணாக இருக்கிறது. எந்த நிலையிலும் ஸ்டர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages