முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உயிாிழந்ததைத் தொடா்ந்து அ.தி.மு.க.வில் பிளவு ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அப்போது இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் டிடிவி தினகரன் தோ்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு பின்னா் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டாா். இந்நிலையில் கடந்த நவம்பா் 17ம் தேதி இந்த வழக்கின் விசாரணையின் போது டிடிவி தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதற்கான முகாந்திரம் இருப்பதாக சி.பி.ஐ. தரப்பில் தொிவிக்கப்பட்டதையடுத்து, டிசம்பர் 4ம் தேதி அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது. அதன்படி டிடிவி தினகரன் இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானாா். அப்போது சட்டப்பிரிவு 120பி (குற்றச்சதி), 201 (ஆதாரங்களை அழித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் மீது வருகின்ற 17ம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்ன விவகாரம்-டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment