சென்னை ஆதம்பாக்கத்தில் தனியார் மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த பெண்கள் தங்கும் விடுதியில் ரகசிய கேமரா கைப்பற்றப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இது தொடர்பாக சென்னையில் உள்ள விடுதிகளில் தீயணைப்பு, வருவாய் துறை, மாநகராட்சி உள்ளிட்ட துறைகளின் அனுமதி பெற்று உரிய விதிகளை பின்பற்றி இருந்தால் மட்டுமே விடுதிகள் இயங்க முடியும் எனவும், அனைத்து விடுதி உரிமையாளர்களும் இந்த மாத இறுதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் சென்னை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். உரிய விதிகளை பின்பற்றாத விடுதி உரிமையாளர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆலோசனை கூட்டம் நடத்திய விடுதி உரிமையாளர்கள், அனைத்து ஆவணங்களை சமர்ப்பிக்க வரும் 31ம் தேதிக்குள் முடியாது என்றும், அதற்கான கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். கால அவகாசம் நீட்டிக்கப்படவில்லை என்றால், சென்னையில் உள்ள 10,000க்கும் மேற்பட்ட விடுதிகள் வரும் 1ம் தேதி முதல் மூட நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதியில் கேமரா இருந்த விவகாரம்-விடுதி நடத்த கடும் கட்டுப்பாடு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment