பொது தேர்வு மையங்கள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் - Agnipuratchi

பொது தேர்வு மையங்கள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன்

Share This

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், ஜனவரி மாதம் சிறப்பு ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர். நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு 26 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். கடந்த 18 ஆண்டுகளாக பிளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு 3242 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதியதாக 750 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என்று கூறினார். இதனையடுத்து, அவரிடம் மாணவிகள் பூ வைக்கவும், கொலுசு அணியவும் பள்ளிக்கல்வித்துறை சார்வில் தடை விதிக்கப்பட்டுள்ளதாஎன்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், "மாணவர்கள் பள்ளிக்கு விலை மதிப்புமிக்க அணிகலன்கள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும். வெள்ளி கொலுசுகளை மாணவிகள் அணிந்து வந்தால் கவன சிதறல் ஏற்படும். மாணவிகள் பூ வைத்து வர எந்த தடையும் இல்லை" என்று விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages