ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த அழைப்பு விடுக்கும் டிடிவி தினகரன் - Agnipuratchi

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த அழைப்பு விடுக்கும் டிடிவி தினகரன்

Share This

அம்மா மக்கள் முன்னேற் றக்கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது, ஏழைகளுக்கு ஏற்றம் தந்து, தமிழகத்தின் காவல் அரணாக திகழ்ந்திட்ட நம் அன்புத்தாயின் மறைவுக்குப் பின்னால் தமிழகத்தின் கவசமாக திகழ்ந்த இயக்கம் இன்று பூண்டிருக்கும் அவலக்கோலத்தை மாற்றிடவே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அவதரித்து, அ.தி.மு.கவை மீட்கும் இயக்கமாக எழுந்துள்ளது. இதற்கு தமிழக மக்கள், தங்களது பேராதரவை வழங்கிவருவதை ஒவ்வொரு களத்திலும் நாம் கண்கூடாகப் பார்த்து வருகிறோம் என்று கூறியுள்ளார். மேலும், பெருமைக்குரிய அம்மாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினமான டிசம்பர் 5ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சாலையிலிருந்து நம் கழகத்தின் சார்பாக நடைபெற உள்ள மவுன ஊர்வலத்தில், நாம் அனைவரும் பெரும் திரளாய் கூடி வங்கக் கடலோரம் துயில் கொள்ளும் நம் அம்மாவின் நினைவிடத்தில் சங்கமித்து இதயஅஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றிடுவோம் என்று அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages