மேகதாது அணை விவகாரம்-காவிரி ஆணைய தலைவர் மசூத் ஹுசைன் தகவல் - Agnipuratchi

மேகதாது அணை விவகாரம்-காவிரி ஆணைய தலைவர் மசூத் ஹுசைன் தகவல்

Share This

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதில், தமிழக பிரதிநிதிகள், மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கப்பட்டதற்கு தங்களது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர். இந்த கூட்டம் முடிந்ததையடுத்து செய்தியாளர்களை சந்தித்த காவிரி ஆணைய தலைவர் மசூத் ஹுசைன் கூறியதாவது, மேகதாது அணை திட்ட அறிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் பரிசீலிக்கும். மேகதாதுவில் அணை கட்ட நாங்கள் எந்த அனுமதியும் தரவில்லை. எங்களிடம் அனுமதி பெறாமல் அங்கு அணை கட்ட முடியாது. அணை கட்டுவதற்கான விவர அறிக்கையை தயாரிக்க மட்டுமே கர்நாடகத்துக்கு அனுமதி தரப்பட்டது. மேகதாது அணை சாத்தியக்கூறு அறிக்கை ஆணையத்தின் ஒப்புதலை பெற்றாக வேண்டும்" என்று விளக்கம் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages