மூன்று வங்கிகளை இணைக்கும் திட்டம்-வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - Agnipuratchi

மூன்று வங்கிகளை இணைக்கும் திட்டம்-வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

Share This

மூன்று வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வருகிற 26ந் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்து உள்ளது. தேனா வங்கி, விஜயா வங்கி மற்றும் பாங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளை இணைப்பதற்கு ஐக்கிய மன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து வருகிற 26ந்தேதி நாடு முழுவதும் ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என மும்பையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எட்டப்பட்டது. இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளரான வெங்கடாச்சலம், இந்த தகவலை வெளியிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages