வருமான வரித்துறைக்கு எதிரான தினகரனின் வழக்குகள் தள்ளுபடி - Agnipuratchi

வருமான வரித்துறைக்கு எதிரான தினகரனின் வழக்குகள் தள்ளுபடி

Share This

டி.டி.வி. தினகரனின் 1995-96 மற்றும் 1996-97 ஆண்டின் வருமான வரி கணக்குகளை மறு ஆய்வு செய்ய வருமான வரித்துறை கடந்த 2001ம் ஆண்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை ரத்து செய்யக் கோரி டி.டி.வி.தினகரன் தொடர்ந்த 2 வழக்குகள் 16 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. விசாரணையின் போது தினகரன் வெளிநாட்டு முதலீடுகளை மறைத்ததாகவும், அவரது வீடு, அலுவலகங்களில் முக்கிய ஆவணங்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்துள்ளதாகவும், இதுதொடர்பாக அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வருமான வரித்துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க தினகரனுக்கு உத்தரவிட்டு வழக்குகளை தள்ளுபடி செய்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages