7வது ஊதியக்குழுவில் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 1,800 இடைநிலை ஆசிரியர்கள் டி.பி.ஐ. முன்பு நேற்று குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கினர். ஆனால் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் ஒன்றும் உடன்பாடு ஏற்படவில்லை. அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர். நேற்று இரவு முதல் அங்கு ♀போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகத்திலும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இன்று அதிகாலை வரை 36 பேர் மயக்கமடைந்த நிலையில், தற்போது மேலும் பலர் மயங்கி விழுந்ததால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 45ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து, டிபிஐ வளாகத்தில் நூறுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு, உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்க, செவிலியர்கள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
Home
அண்மை செய்திகள்
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுப்பு - மயக்கம் அடைந்தோர் எண்ணிக்கை உயர்வு
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுப்பு - மயக்கம் அடைந்தோர் எண்ணிக்கை உயர்வு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment