தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மூட கோரி போராட்டம் நடைபெற்றதால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தார்கள். இதனையடுத்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து ஆலைக்கு சீல் வைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாந்த நிறுவனம் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து ஸ்டெர்லைட்டை மூடி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு வழங்கியது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதிய வழிமுறைகளை அளிக்கவேண்டும், ஆலையை திறப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆட்சியார் செய்து தரவேண்டும், பாதுகாப்பு அளிக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பசுமை தீர்ப்பாயம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை பெற மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை விண்ணப்பிக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
ஸ்டர்லைட் ஆலையை திறக்க அனுமதித்தது பசுமை தீர்ப்பாயம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment