சபரிமலை விவகாரத்தை முன்வைத்து கேரளாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் தொடர்ந்து 4 நாட்கள் சட்டப்பேரவையை முடக்கிய நிலையில், இன்றைய தினமும் அவை கூடிய உடன் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சபரிமலை விவகாரத்தை முன் எடுத்தனர். கேரள அரசின் அணுகுமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கையில் கருப்புக் கோடியை ஏந்தியபடி, சபாநாயகர் இருக்கைக்கு முன்பு வந்து கூச்சலிட்டனர். இதனை தொடர்ந்து அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே சபரிமலை விவகாரத்தில் பாஜக போராட்டத்துக்கு பதிலடி தரும் வகையில், சபரிமலையில் இளம்பெண்கள் செல்வதற்கு ஆதரவு தெரிவித்து ஜனவரி 1ம் தேதி திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை, 10 லட்சம் பெண்கள் மனித சங்கிலி அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த முதல்வர் பினராய் விஜயன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சபரிமலை விவகாரம்-கேரள சட்டப்பேரவையில் அமளி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment