ஜனவரியிலிருந்து பேப்பர் கப்களுக்கு விலக்கு - Agnipuratchi

ஜனவரியிலிருந்து பேப்பர் கப்களுக்கு விலக்கு

Share This

தமிழகம் முழுவதும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர் கருத்தரங்கம், கண்காட்சி நடந்தது. இதில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் பேசுகையில், அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தமிழக அரசு தடை விதிக்கவில்லை. ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. பேப்பர் கப்களில் 6 சதவீதம் பிளாஸ்டிக் இழை தடவப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறது. இதனை 4 சதவீதமாக குறைத்தால் பேப்பர் கப்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், பிளாஸ்டிக் தடையின் மூலம் பாக்குமட்டை, கரும்பு சக்கை, மண்பாண்டங்கள், துணிப்பை போன்ற இயற்கை சார்ந்த பொருட்களுக்கு வரவேற்பு பெருகும். பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்துக்குப்பின்பு திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். திடக்கழிவு மேலாண்மை மூலம் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்" என்றும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages