சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னை வனநாதர் சந்நிதியில் கடந்த 2004ம் ஆண்டு பார்வதி தேவியுடன் மயில் சிலைகள் மாற்றப்பட்ட போது அதற்கு பதிலாக புதிய சிலைகள் வைக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அப்போது, அப்போது கபாலீஸ்வரர் கோவிலின் செயல் அலுவலராக திருமகள் இருந்தார். இந்த நிலையில் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஸ்தபதி முத்தையா, மற்றும் செயல் அலுவலர் திருமகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து, ஸ்தபதிக்கு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது, திருமகள் தாக்கல் செய்துருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து திருமகளிடம் விசாரணை நடத்த, வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சென்றனர். ஆனால் அவர் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில், அவரை நேற்று கண்டறிந்து கைது செய்தனர். நேற்று ஞாயிற்றுகிழமை நீதிமன்றம் விடுமுறை என்பதால் நீதிபதி இல்லத்தில் பெண் அதிகாரி திருமகள் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் நீதிமன்ற சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து திருச்சி மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டார்.
சிலை கடத்தல் விவகாரம்- அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கைது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment