ஜனவரி 22ம் தேதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம், ஜாக்டோ-ஜியோ அமைப்பு - Agnipuratchi

ஜனவரி 22ம் தேதி திட்டமிட்டபடி வேலைநிறுத்தம், ஜாக்டோ-ஜியோ அமைப்பு

Share This

ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு ஜாக்டோ - ஜியோ அமைப்பு வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தியது. பின்னர் பள்ளி மாணவர்களின் நலன் கருதி, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாக்டோ-ஜியோ சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மீண்டும் கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்க மறுத்த ஆசிரியர்கள், போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அளிக்கப்பட்ட உறுதிமொழியை வாபஸ் பெறுவதாக கூறியுள்ளனர். இதனை நீதிபதிகளும் ஏற்றுக்கொண்டதால், ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டம் வரும் 22ம் தேதி நடைபெறும் என்பது உறுதியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages