ஓசூர் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு, பேருந்து மீது கல்வீசி சேதப்படுத்திய வழக்கில் சிறப்பு நீதிமன்றம் 3ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனால் பதவி இழந்த அவர், தம் மீதான தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிக்கும் வழக்கறிஞருக்கும் காரசார விவாதம் நடைபெற்றது. தற்போது சட்டத்தை வகுக்கும் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக தண்டனைக்கு தடை விதிக்க கோருவதை புரிந்துகொள்ள முடியவில்லை என நீதிபதி வியப்பு தெரிவித்தார். மேலும் கட்சி தலைவர்களின் வழிகாட்டுதலின் படிதான் மக்கள் செயல்படுகிறார்கள் என்றும் அந்தத் தலைவர்களே வன்முறையில் ஈடுபடுவது, பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது போன்றவை உண்மையான மக்கள் பிரதிநிதிக்கான அடையாளம் இல்லை என்றும் நீதிபதி வேதனை தெரிவித்தார். பாலகிருஷ்ணா ரெட்டி மீதான தண்டனையை நிறுத்திவைக்கவோ, தீர்ப்புக்கு தடை விதிக்கவோ முகாந்திரம் இல்லை என்ற நீதிபதி, பாலகிருஷ்ணா ரெட்டியின் இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்ததோடு, பிரதான மேல்முறையீடு வழக்கை பிப்ரவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய முடியாது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment