பொங்கல் பண்டிகையையொட்டி 6 நாட்கள் அரசு விடுமுறை உள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையிலிருந்து மட்டும் 14,263 பேருந்துகள், பிற ஊர்களிலிருந்து 10,445 பேருந்துகள் என மொத்தம் 24,708 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் 30 மையங்களில், கடந்த 9ஆம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. இதனிடையே, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதவரம், தாம்பரம் ரயில்நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு மற்றும் கே.கே.நகர் தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு, 24 மணி நேரமும் சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தம் 250 இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக, போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. நேற்று மாலை முதல் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல படையெடுத்த மக்கள்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment