சென்னையில் உள்ள சரவண பவன், அஞ்சப்பர் ஆகிய உணவகங்களிலும், ஹாட் பிரட் பேக்கரி மற்றும் கிராண்ட் ஸ்வீட்ஸ் இனிப்பு விற்பனை நிறுவனங்களிலும் கடந்த ஜனவரி 3ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கி அந்நிறுவனங்களுக்கு சம்மந்தப்பட்ட 32 இடங்களில் 3 நாட்கள் நடைபெற்ற சோதனையில், பல ஆவணங்கள் கைப்பற்றினர். இந்த ஆவணங்களை ஆராய்ந்ததில் சரவணபவன், அஞ்சப்பர் ஆகிய உணவகங்களுக்கு வெளிநாடுகளில் கிளைகள் உள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், ஹாட் பிரட் பேக்கரியும், கிராண்ட் ஸ்வீட்ஸ் இனிப்பகமும், வெளிநாடுகளுக்கு உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றன. இந்த 4 நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து திரட்டும் வருவாயை மறைத்து, வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். 120 கோடி ரூபாய் வரி ஏய்ப்புடன், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை முறைகேடும் இருப்பதால், அது தொடர்பான ஆவணங்கள் அமலாக்கத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறும் வருமான வரித்துறையினர், 4 நிறுவனங்களிலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.
சரவணபவன் உள்ளிட்ட 4 உணவகங்களில் நடந்த ஐடி ரெய்டு-120 கோடி வரி ஏய்ப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment