மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற கோரிக்கை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாளை மற்றும் நாளை மறுநாள் நாடு தழுவிய போராட்டம் நடைபெறவுள்ளது. இந்த போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம், போக்குவரத்து, மின்வாரிய சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 1½ லட்சம் மத்திய அரசு ஊழியர்களுடன் சுமார் 9 லட்சம் மாநில அரசு ஊழியர்களும் பங்கேற்க உள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் வங்கி ஊழியர்களும் இன்சூரன்ஸ் ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளார்கள். போக்குவரத்து தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கின்றனர் . அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கத்தை தவிர்த்து அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் கலந்து கொள்வதால் தமிழகத்தில் பேருந்து சேவை முடங்கும் என தொ.மு.ச. பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். இதனால் பேருந்துகளை நாளை பாதுகாப்புடன் இயக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் பஸ் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சென்னையில் உள்ள 33 பஸ் டெப்போக்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாளை பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் வழக்கம் போல் இயக்கப்படும்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment