உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக, அலகாபாத் ஐகோர்ட், 2010ல் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீட்டு மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனை அடுத்து, "இது தொடர்பாக, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வழக்கின் விசாரணையில் இருந்து, நீதிபதி, யு.யு. லலித் விலகினார். இதையடுத்து, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வில், நீதிபதிகள், எஸ்.ஏ. பாப்தே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. நசீர் இடம்பெற்றனர். அயோத்தி வழக்கை, இந்த அமர்வு, 29ல் விசாரிக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எஸ்.ஏ., பாப்தே விடுமுறையில் செல்வதால், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை சுற்றி கையகப்படுத்தப்பட்டுள்ள சர்ச்சையில் இல்லாத நிலத்தை ராம்ஜென்மபூமி நிவாஸ் அமைப்பிடம் ஒப்படைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அயோத்தி விவகாரம்-உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment