தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட 8 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் அழிப்பு - Agnipuratchi

தமிழகம் முழுவதும் பறிமுதல் செய்யப்பட்ட 8 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் அழிப்பு

Share This

வெளி மாநிலங்களில் இருந்து  தமிழகத்துக்கு ரயில்கள் மற்றும் வாகனங்களில் கடத்தி வரப்படும் கஞ்சா அபீன், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனை நடத்தி பறிமுதல் செய்து வருகின்றனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் போதை பொருட்களை நீதிமன்ற உத்தரவின் பேரில், செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம், வனப்பகுதியில் தனியாருக்கு சொந்தமான போதைப்பொருள் அழிக்கும் தொழிற்சாலையில் அழிப்பது வழக்கம். அதன்படி, தமிழகம் முழுவதும் போதை தடுப்பு பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட 8 கோடி மதிப்புள்ள 4 டன் போதை பொருட்களை, தமிழ்நாடு போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி அனிவிஜயா தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று எரித்து அழிக்கப்பட்டது. அப்போது, டி.எஸ்.பி.புருஷோத்தமன், சீனிவாசபெருமாள், மதுவிலக்கு ஆயத்தீர்வை துணை ஆணையர் சங்கீதா உதவி ஆணையர் கலைவாணி, தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் மீனாட்சி உட்பட பலர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages