சபரிமலை விவகாரம்-கேரளா எம்.எல்.ஏ., வீட்டில் வெடிகுண்டு வீசிய நபர்கள் கைது - Agnipuratchi

சபரிமலை விவகாரம்-கேரளா எம்.எல்.ஏ., வீட்டில் வெடிகுண்டு வீசிய நபர்கள் கைது

Share This

திருவனந்தபுரம் தடசேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஷம்சீர் வீடு மீது வெடிகுண்டு வீசிய சம்பவம் தற்போது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்மந்தப்பட்ட 20 பேரை போலீசார் தற்போது கைது செய்துள்ளார்கள். இதே போல் பாஜக எம்பி முரளிதரன் வீட்டின் மீதும் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. சபரிமலையில் 2 பெண்கள் சென்று தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் பாஜக-வினர் தொடர்ந்து போராட்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 1319 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், உச்சநீதிமன்ற அனுமதிக்கு பிறகு சபரிமலையில் 10 இளம் பெண்கள் தரிசனம் செய்துள்ளார்கள் என்றும், தீர்ப்பு⚖ செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதனையும் கேரள அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages